கோட்டைப்பட்டிணம் சாலை விபத்தில் அகால மரணம்மடைந்த சகோதரர் செல்வராஜ் குடும்பத்திற்கு உதவி கரம் நீட்டுங்கள்...கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு நாட்களுக்கு முன்  25/08/2019 ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் கோட்டைப்பட்டினம் சகோதரபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
அவரது குடும்பம் மிகவும் பின்தங்கி இருந்த நிலையில் செல்வராஜ் உடலுக்கு கோட்டைப்பட்டினம் இளைஞர்கள் பொறுப்பேற்று மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கான அனைத்து உதவிகளும் செய்து இறந்த செல்வராஜ் உடலை மணமேல்குடி பொது மையவாடியில் அடக்கம் செய்தனர்...

மேலும் சகோதரர் செல்வராஜ் அவர்களுடைய குடும்பத்திற்க்கு கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த நெல்லுக்கடை நெய்னா முஹம்மது அவர்கள் மூலமாகவும் மற்றும் அவருடைடைய  நண்பர்கள் மூலமாகவும் ரூ 30,000 பொருளாதார உதவி வழங்கப்பட்டது.

இவர்கள் செய்த இந்த உதவிக்காக இறைவனிடம் பிராத்தித்தவர்களாக மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

விபத்தில் மரணம் அடைந்த செல்வராஜ் என்பவருக்கு 5 குழந்தைகள் அதில் 4 பெண் குழந்தைகள் எனவே குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகிவிட்டது..

எனவே இப்பதிவை காண்பவர்கள் கீழ்காணும் அக்கவுண்ட் எண்ணிற்கோ அல்லது அவர்களை தொடர்பு கொண்டோ இறைவனுக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செல்வராஜ் அவர்களின் குடும்ப வங்கி கணக்கிற்கு நேரடியாக தாங்களின் பொருளாதார உதவிகளை வழங்கலாம்.

வங்கி கணக்கு விபரம்:

DEVI.S

ACCOUNT NO : 520101043218756

IFSC CODE : CORP0001378

CORPORATION BANK

KOTTAIPPATTINAM

தாங்களின் மேலான உதவிகளை எதிர்பார்த்தவர்களாக சகோதரர் செல்வராஜ் அவர்களுடைய குடும்பத்தார்கள்...

தகவல் : KPM உற்றுநோக்கு செய்திகள், கோட்டைப்பட்டினம்.

குறிப்பு : மேலுள்ள தகவல் அனைத்தும் GPM மீடியாவால் உறுதி செய்யப்பட்டது.

Post a comment

0 Comments