புதுக்கோட்டையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்



பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை தமிழகத்தில் அமலில் இருந்து வருகிறது.
மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை நகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஜிவா.சுப்பிரமணியம் உத்தரவின் பேரில் சுகாதார அலுவலர் டாக்டர்.யாழினி தலைமையில், ஆய்வாளர் பரக்கத்துல்லா, மற்றும் அலுவலர்கள் புதுக்கோட்டை கீழ ராஜ வீதி, பிருந்தாவனம், அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையின் போது 515 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்ததற்காக ரூ.11 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது. புதுக்கோட்டை நகர் பகுதியில் மேலும் இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பர்வள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்.

Post a Comment

0 Comments