கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு GPM மக்கள் மேடை சார்பாக பாராட்டு கேடயம்



புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 73-வது சுதந்திர தின விழா நேற்று 15/08/2019 வியாழக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியில் 2018-2019 கல்வியாண்டில் பயின்ற பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு GPM மக்கள்மேடை சார்பாக பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

GPM மக்கள்மேடை கடந்த நான்கு ஆண்டுகளாகவே இது போன்று பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். மேலும் அப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்து வந்த நிலையில் அவற்றை போக்கும் விதமாக GPM மக்கள்மேடை சார்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசியர் ஒருவரை நியமித்து சம்பளம் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





பத்தாம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்கள் விபரம்:

1.அ. ஸகீனா பேகம்   - 451/500
1.பீ. சமீமா                       - 451/500
2.இ. ஷபரீனா பேகம் - 413/500
3. க. முனியசாமி         - 395/500

பதினொன்றாம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்கள் விபரம்:

1.ந. சித்தி ரிஸ்வானா - 422/600
2.செ. ரசிமா பானு         - 369/600
3.ஆ. நவீன்குமார்          - 357/600

பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்றிடம் பெற்றவர்கள் விபரம்:

1.நி. ஹாஜா நஜிபுதீன் - 396/600
2.கா. நெளசின் பானு    - 366/600
3.ரா. பௌசியா பேகம் - 365/600

இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள், GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

தகவல்: ஆலோசனை குழு - 4

Post a Comment

0 Comments