புதுக்கோட்டை வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில்நெறி வழிகாட்டும் மையம் என மாற்றம்



புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்  இனி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் எனப் பெயர் மாற்றப்பட்டு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்.

தொழில்நெறி வழிகாட்டுதலுக்காக இளம் வல்லுநர் பணியிடமும், ஆலோசகர் பணியிடமும் உருவாக்கப்பட்டுள்ளது.

 வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அன்றாட பணிகளுடன்,

திங்கள் தோறும் திறன் பயிற்சிக்கான ஆலோசனை முகாம்,

செவ்வாய் தோறும் பள்ளி, கல்லூரிகளில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,

புதன் கிழமைகளில் போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள்,

 வியாழக்கிழமைகளில் தனிநபர், குழு வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,

 வெள்ளிக் கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் போன்ற பணிகளை இம்மையம் செய்கிறது.

Post a comment

0 Comments