புதுக்கோட்டையில் நாளை 20/09/2019 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை வெள்ளிக்கிழமை  காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்எஸ்எல்சி முதல் பட்டப் படிப்பு வரை முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

இம்முகாமில் வேலை கிடைக்கும்பட்சத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாமல் அதே பதிவு மூப்புடன் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a comment

0 Comments