நடுவானில் சென்னை விமானத்தில் திடீர் கோளாறு: உயிர்தப்பிய 240 பயணிகள்...சென்னையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீர் கோளாறு ஏற்பட்டது. லேசான மின் கசிவு இருப்பதை கண்ட விமானி, சாதுரியமாக விமானத்தை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார்.இதனையடுத்து, சென்னையில் இருந்து தோகாவுக்கு செல்ல இருந்த 240 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினர். விமானியை பாராடிய பயணிகள், தரையில் தங்கள் கால் பதித்த பின்னரே நிம்மதி பெருமூச்சு விட்டனர். சிறிது நேரம் கழித்து, அனைத்து பயணிகளும் வேறொரு விமானம் மூலம், தோகாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Post a Comment

0 Comments