கோபாலப்பட்டினம் தெருக்களில் தேங்கி நிற்கும் சாக்கடை: தொற்று நோய்கள் பரவும் அபாயம்புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டினத்தில் உள்ள தெருக்களில் கழிவு நீர் தேங்கியிருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதுடன், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டினத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் வசதி இல்லை. இதனால் தெருவெங்கும் கழிவுநீர் பாய்ந்தோடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

தற்போது பருவமழை தொடங்கிருக்கும் இவ்வேளையில், இதுபோன்று சாலைகளில் கழிவு நீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பல தெருக்களிலும் சாக்கடை நீர் தேங்கி உள்ளது. பெரியபள்ளிவாசல் செல்லும் வழி, கறிக்கடை தெரு, பெண்கள் மதரஸா தெரு, கடற்கரை தெரு, VIP நகர், அவுலியா நகர் ஆகிய பகுதிகளிலும், இந்த தெருக்களில் பிரியும் குறுக்கு தெருக்களிலும் சாக்கடை நீர் தேங்கி உள்ளது.

ஆகவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத் துறை கிராமத்தின் சுகாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் கூறுகையில், தெருவில் சாக்கடை ஓடுவதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில்தான் அதிகளவிலான மக்கள் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் மற்றும் 11 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது போன்று உயிர் பலிகள் இனிமேல் நடக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை தேவை எனவும் மேலும் அதிகாரிகள் நோய் வந்தவுடன் இந்த கிராமத்தை எட்டி பார்க்காமல் வருமுன் காப்போம் என்ற பழமொழிக்கிணங்க நோய் வருவதற்கு முன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார்.

குறிப்பு: கோபாலபட்டினத்தில் இது போன்று வேறெங்கும் சாக்கடை நீர் தேங்கி இருந்தால் புகைப்படம் மற்றும் எந்த இடம் என்று குறிப்பிட்டு GPM மீடியா https://wa.me/918270282723 வாட்ஸ்ஆப் நம்பருக்கு அனுப்பவும்.

அவுலியா நகர் பகுதியில் சாக்கடையில் இருந்து கொசு உற்பத்தியாகிருக்கும் காட்சி 


மக்கா 4-வது தெரு (வாத்தியார் அப்பா வீடு அருகில்) செல்லும் வழியில் ஓடும் சாக்கடை


கறிக்கடை தெருவில் ஓடும் சாக்கடை 

பெண்கள் மதரசா தெருவில் தேங்கி நிற்கும் சாக்கடை 


VIP நகரில் இருந்து பெரியபள்ளிவாசல் வரும் வழியில் கட்டிக்கிடக்கும் சாக்கடைVIP நகரில் ஓடும் சாக்கடை 

மத்தீன் சார் தெரு கடைசியில் ஓடும் சாக்கடை 

அவுலியா நகர் பகுதிகளில் ஓடும் சாக்கடை மற்றும் தெருக்களின் அவலநிலை அவுலியா நகரில் முழுத்தெருவையே ஆக்கிரமித்திருக்கும் சாக்கடை இந்த பகுதி மக்களின் நிலை..?
புகைப்படம் உதவி: சல்மான்கான்
புகைப்படம் உதவி: J.உஸ்மான் அலி

Post a Comment

0 Comments