புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 முஸ்லிம் மகளிருக்கு சிறு தொழில் தொடங்க உதவி



புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 முஸ்லிம் மகளிருக்கு சிறு தொழில் தொடங்குவதற்கான நிதி உதவியாக மொத்தம் ரூ. 3.30 லட்சத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அவர்கள்  திங்கள்கிழமை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின்போது இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 461 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டி. சாந்தி, மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் மாலதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 நார்த்தாமலையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மனு அளித்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ரூ. 7,500 மதிப்புள்ள மூன்று சக்கர வாகனம் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டது. மேலும், அன்னவாசல் அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனநல மையத்தில் சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ள 4 பேர் அவரவர் குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டனர்.

Post a Comment

0 Comments