மீமிசலில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மீமிசலில் மாட்டு வண்டி எல்கைபந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆவுடையார்கோவில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் பொன்பேத்தி இரா.சுந்தர்ராஜன் முன்றாம் ஆண்டு நினைவாக இந்தப் போட்டி நடத்தப்பட்டது.

மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் 91 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டன.

பெரிய மாடு பிரிவில் 16 வண்டிகள் கலந்து கொண்டதில் முதலாவதாக வந்த பரளிசெல்விகம்பம் அழகுபிள்ளை மாடுகளுக்கு ரூ.30 ஆயிரத்து மூன்றும், 2ஆவதாக வந்த கடம்பூர் இளைய ஜமீன் கருணாகர ராஜா மாடுகளுக்கு ரூ.28 ஆயிரத்தி மூன்றும், 3ஆவதாக வந்த சூரக்குண்டு தெய்வேந்திரன் மாடுகளுக்கு ரூ.26ஆயிரத்தி மூன்றும் என ரொக்கப்பரிசு மற்றும் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன.

நடுமாடு பிரிவு: நடுமாடு பிரிவில் 25 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டதில் முதலாவதாக வந்த வைரிவயல் வீரமுனியாண்டவர் மாடுகளுக்கு முதல் பரிசாக 28ஆயிரத்தி மூன்றும், இரண்டாவதாக வந்த கல்லுப்பட்டி கே.ஏ.அம்பாள் மாடுகளுக்கு ரூ.26 ஆயிரத்தி மூன்றும், மூன்றாவதாக வந்த மாங்குடி குமார் மாடுகளுக்கு 24ஆயிரத்தி மூன்றும் என ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

சின்னமாடு பிரிவு: சின்னமாடு எனப்படும் கரிச்சான்மாடு பிரிவில் 50 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டதில், முதலாவதாக வந்த பொய்கைவயல் முத்துக்கருப்பர் மாடுகளுக்கு 26 ஆயிரத்தி மூன்றும், இரண்டாவதாக வந்த கட்டுமாவடி செந்தூரான் டிராவல்ஸ் மாடுகளுக்கு 24ஆயிரத்தி மூன்றும், மூன்றாவதாக வந்த பந்தயபுரம் துளசிநாயனார் மாடுகளுக்கு 22 ஆயிரத்தி மூன்றும் என ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை ஏராளமானவர்கள் கண்டு களித்தனர்.

Post a Comment

0 Comments