கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகத்தர் மண்டல தமுமுக-மமகவின் கிளையான இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவையின் ரய்யான் கிளையின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 19.09.2019 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

இதில் பேரவையின் துணை தலைவர் மெளலவி. ஷரஃபுத்தீன் உமரி அவர்கள் 'முயற்சி திருவினை ஆக்கும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளையின் பொறுப்பாளரும் கத்தர் மண்டல தமுமுக மமகவின் மக்கள் தொடர்பு செயலாளருமான சகோ. பாஷா அவர்கள் சிறப்பான முறையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

வெள்ளிக்கிழமை அமர்வு

கத்தர் மண்டல தமுமுக மமகவின் அல்கோர் கிளையின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அல்கோரில் பொறுப்பு பொதுச்செயலாளர் சகோ.மைதீன்ஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மெளலவி. இம்ரான் உமரி அவர்கள் கர்பலாவில் நடந்து என்ன? என்ற தலைப்பிலும் , மெளலவி.ஷரஃபுத்தீன் உமரி அவர்கள் யூதர்கள் யார்? எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ஆலோசனை குழு உறுப்பினர் சகோ. தாவூத் அவர்களும் அல்கோர் கிளையின் பொறுப்பாளர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  சிறப்பான முறையில் செய்திருந்தார்கள்.
இந்த நிகழ்வில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள், அப்பாஸ் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: அபுபக்கர் சித்திக்

Post a comment

0 Comments