நிஜ ஹீரோவான ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கீழக்கரையில் பாராட்டு..!!!கடந்த 02.09.2019 அன்று  இராமநாதபுரத்தைச் சேர்ந்த புற்றுநோய் பாதித்த சிறுவனை புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு துரித வேகத்தில் கொண்டு சென்ற ஓட்டுநர் ஜாஸ் அவர்களுக்கு அமீரக காங்கிரஸ் சார்பில் அதன் பொருளாளர் கீழை ஜமீல் பாராட்டு தெரிவித்தார்.

நேற்று  (04.09.2019) தமுமுக இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா முன்னாள் மாவட்டச் செயலாளரும் மூத்த தமுமுக தலைவருமான ஸலீமுல்லாஹ்கான், மாநிலச் செயலாளர் தொண்டி ஸாதிக் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் இராமநாதபுரம் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் நஸீர்கான் பொன்னாடை போர்த்தினார். அமீரக காங்கிரஸ் சார்பாக ஊக்குவிப்பு பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் மமக தலைவர் முஜீபு தலைமையில் கீழக்கரை நிர்வாகிகள், இராமநாதபுரம் தமுமுக நகர் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புற்றுநோய் பாதித்த சிறுவனுக்கு புதுவை காங்கிரஸ் முதல்வர் அவர்கள் மூலம் நல்ல சிகிச்சைக்கு உதவி செய்வதாக தமிழக காங்கிரஸ் சிறுபான்மை அணி ஆலோசகர் அமீர்கான் தெரிவித்தார்.

Post a comment

0 Comments