கோபாலபட்டினம் காட்டுகுளம் தண்ணீர் வெளியேற்றபட்டதுகோபாலப்பட்டினம் காட்டுகுளத்தில் உள்ள தண்ணீர் கடந்த ஓராண்டுக்கு மேல் ஆகியதால் குளம் மாசடைந்து கடந்த ஒரு மாதமாக துர்நாற்றம் வீசியது.

எனவே காட்டுகுளத்தில் மாசடைந்துள்ள நீரை வெளியேற்றி புதிய நீர் விட அப்பகுதி மக்கள் GPM சீரமைப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில் GPM சீரமைப்பு குழுவின் பொருளாதாரத்தில் மோட்டார் பம்பு செட் மூலம் கடந்த 02.09.2019 முதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுவிட்டது. எனவே தற்பொழுது தரை காயவிடப்பட்டுள்ளது.

“ஒருவர் ஒரு கிணற்றை தோண்டுகிறார். அதிலிருந்து ஜின் இனம், மனித இனம், பறவை இனம் போன்ற உயிரினம் நீர் அருந்துவதால் அவருக்கு மறுமை நாளில் இறைவன் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

இந்நிலையில் தரை முழுவதும் காய்ந்த பிறகு தண்ணீர் கொண்டுவருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என GPM சீரமைப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வறட்சி அதிகம் நிலவுகிறது! தண்ணீர் இல்லை...

குடி தண்ணீருக்கு கூட பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உண்டாகியுள்ளது! (அல்லாஹ் பாதுகாப்பானாக...!)

எனவே அன்பு சகோதர,சகோதரிகளே! உங்களுடைய ஒவ்வொரு வேளை தொழுகைகளிலும் மழை நன்றாக பொழிய வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இதை அலட்சியமாக எண்ண வேண்டாம்.

கண்டிப்பாக மறக்காமல் துஆ செய்யுங்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!

ரஹ்மத்தான மழைக்கு அதிகம் துஆ செய்யுங்கள்.

உங்கள் துஆ அதிகம் தேவை!

ஒட்டு மொத்தமா துஆ கேட்டால் அல்லாஹ் கொடுப்பான்!

அல்லாஹ் தன் திருமறையில்,

‘காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம்.
பின்னர் வானிலிருந்து நீர் பொழிவித்து அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம், நீங்கள் அதனை சேமித்து வைப்போராய் இல்லை’ (15: 22) என்று குறிப்பிடுகிறான்.
Post a comment

0 Comments