புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினத்தில் உள்ள நெல்லிக்குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மையப்பகுதியில் அமைந்துள்ளது நெல்லிக்குளம்.
இக்குளம் அப்பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இக்குளம் சுமார் 1000 குடும்பங்களுக்கு பயன்பெறும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக போதிய மழை இல்லாததால் இக்குளம் வரண்டு காணப்பட்டது.
பின்னர் அவ்வபோது கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்ததால் அக்குளத்தில் தண்ணீர் தேங்கி குளம் முழுவதும் கோரை புல் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துள்ளது மற்றும் அளவுக்கு அதிகமாக கோரை வளர்ந்துள்ளதால் சில சமயங்களில் ஆடு மாடுகள் அதனுல் சிக்கி உயிரிழக்கின்றன.
இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளம் முழுவதும் புதர்போல் மண்டியுள்ள கோரை புல்லை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.