புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெறுவோர்தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து  புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர் (பொ)  செ.சாந்தி  தெரிவித்தது:

தமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை சந்தைப் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை கோ.அமுதா,

அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கி..சிவகுமார்,

திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ம.மா. அரங்கசாமி,

கவரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி சிறப்பாசிரியர் ஆ. வேதமுத்து,

கோட்டை காமராஜ் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஆ. விஜயேந்திரன்,

ஊனையூர் பிச்சையப்பா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி இடைநிலையாசிரியர் தா. சீனிவாசன்,

குருவிக்கொண்டான்பட்டி ஸ்ரீ சொக்கலிங்கம் மீனாட்சி நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியை ஆர். மீனாட்சி,

சவேரியார்புரம் புனித சவேரியர் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை என். ரோசாலி,

ஆலங்குடி புனித அற்புத மாதா அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் செ. அருளாந்து,

இலுப்பூர் ஆர்.சி. தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியை ஞா. ஜாக்குலின் யோலா,

ராஜகோபாலபுரம் வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கோ.தவமணி.

தேர்வு செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் சென்னையில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை புதுக்கோட்டை  மாவட்டக் கல்வி அலுவலர் எஸ். ராகவன் வழங்கி வாழ்த்துக் கூறி அனுப்பினார்.

அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) ஜீவானந்தம், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a comment

0 Comments