மணமேல்குடி கடற்கரை பகுதியில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் பனை விதை நடவு..!



மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமை வகித்து கோடியக்கரை கடற்கரை பகுதியில் பனை விதை நடவு செய்து தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில் மணமேல்குடி கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து ஏற்படும் மண்ணரிப்பை தடுக்கும் நோக்கில் பனை விதைகளை கடலோர பகுதிகளில் நடவு செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் முக்கியமான சுற்றுலா தலமாக மணமேல்குடி கோடியக்கரை மேம்படுத்தபட வேண்டும். கோடியக்கரை பகுதிகளில் துணிகள் மற்றும் பாலிதீன் பைகள் தேங்காத வண்ணம் சுத்தப்படுத்தும் நோக்கத்தில் மணமேல்குடி கோடியக்கரை பகுதியை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டது. கடற்கரைப் பகுதிகளில் அதிகமாக வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

மேலும் மக்கள் பாதை இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடற்கரை பகுதியில் சுமார் 2000 பனை விதைகளை நட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் சுரேஷ் ,காளிமுத்து உட்பட மக்கள் பாதை இயக்க நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments