அறந்தாங்கியில் தேசிய பசுமைப்படை முகாம்



அறந்தாங்கி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை முகாம் ஓசோன் விழிப்பபுணர்வு தினத்தை முன்னிட்டு அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் தலைமை வகித்து சுற்றுப்புற சூழலின் அவசியத்தையும் மரம் வளர்த்தலின் முக்கியத்துவத்தையும்,ஓசோன் படலத்தை பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

அறந்தாங்கி ஆண்கள் பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மற்றும் வல்லத்திராகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அறந்தாங்கி கல்விமாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் வரவேற்றார்.

வெண்ணாவல்குடி, சிதம்பரவிடுதி, கோபாலபட்டிணம் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உட்பட 15 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு மரம் வளர்க்க சிறப்பு ஊக்க தொகையாக ரூ.5000, மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

இறுதியாக அறந்தாங்கி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை இணை ஒருங்கிணைப்பாளர் கேவிக்கோட்டை செல்வக்குமார் நன்றி கூறினார். 

Post a Comment

0 Comments