மணமேல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத பணம், ஆவணங்கள் சிக்கியதுபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்  நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 17 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல்  செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் பத்திரப்பதிவு  அலுவலகம் உள்ளது. இங்கு சார்பதிவாளர் இடம் காலியாக உள்ளது.

தற்போது,  பொறுப்பு சார்பதிவாளர் சண்முகநாதன் உள்ளார். இவர்  பத்திரப்பதிவு செய்ய கூடுதலாக பணம் கேட்பதாக புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச  ஒழிப்பு துறைக்கு தகவல் வந்தது.

இதனை நிரூபிக்கும் வகையில், நேற்று முன்தினம் இரவு 7 மணி வரை பத்திரப்பதிவு  அலுவலகம் திறந்து இருந்தது.

இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு  துறை டிஎஸ்பி கருப்பையா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனையிட்டனர்.

அலுவலகத்தின் அனைத்து  கதவுகளும் பூட்டப்பட்டு பதிவாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.  இந்த சோதனை நேற்று அதிகாலை ஒரு மணி வரை நடந்தது. இதில் கணக்கில் வராத பணத்தை 17,590 மற்றும் ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக பதிவாளரிடம் லஞ்ச ஒழிப்பு  போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments