புதுகை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி தீவிரம்...புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், டெங்கு கொசு ஒழிப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப்பணியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் 139 பேரும், புதுக்கோட்டை நகராட்சிப் பணியாளர்கள் 20 பேரும், சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து 20 பேரும் பங்கேற்றனர்.

மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள முள்புதர்கள் அகற்றப்பட்டன. கொசு மருந்து தெளிக்கப்பட்டது.
புகை மருந்தும் அடிக்கப்பட்டது.

முன்னதாக டெங்கு ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு  அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் ராஜ்மோகன், துணை முதல்வர் சுஜாதா, நிலைய மருத்துவ அலுவலர் ரவிநாதன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments