பரமக்குடி அருகே உள்ள வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சோனைமுத்து. இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர்களின் மகன் மணிகண்டன் (42). திருமணமாகாத இவர் பல ஆண்டுகளாக குவைத் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.
மாதம் மாதம் ஊதியத்தை தனது தாய்க்கு அனுப்பி வந்த அவர் கடந்த 8-ந் தேதி காலையில் கடைசியாக பேசியுள்ளார். இந்த நிலையில் அன்று இரவு திடீரென்று மணிகண்டன் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவரது தாய் சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தனது மகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரியும், தனது மகனின் இறப்பிற்கான உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யக் கோரியும் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு கொடுத்தார். காலையில் நன்றாக பேசிய மகன் இரவில் எவ்வாறு திடீரென்று இறந்தான் என்பது மர்மமாக உள்ளது. அதன் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.
சரஸ்வதிக்கு 3 ஆண், ஒரு பெண் பிள்ளைகள் உண்டு. மூத்த மகன் சுரேஷ் 22 வயதில் நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டாராம். சரஸ்வதியின் கணவர் சோனைமுத்து வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரும் இறந்து விட்டாராம். பெரும் போராட்டத்திற்கு பின்னர் 6 மாதம் கழித்து உடலை கொண்டு வந்துள்ளனர்.
மேலும், ஒரே மகள் பாக்கியலெட்சுமியை திருமணம் செய்து கொடுத்த நிலையில் 23 வயதில் அவரும் 2 வயது மகனை கொடுத்துவிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதனால் இறந்து போன மூத்த மகனின் மகளையும், மகளுக்கு பிறந்த மகனையும் சரஸ்வதிதான் வளர்த்து வருகிறார்.
இதுபோன்ற குடும்ப சூழ்நிலையில்தான், திருமணம் செய்யாமலேயே குடும்பத்தை காப்பாற்றி வந்த மணிகண்டனும் இறந்துவிட்டதால் சரஸ்வதியை சோகத்தின் மேல் சோகம் சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்று ஒரே மகனான சரவணனை மட்டுமே நம்பி உள்ளதாக சரஸ்வதி கண்ணீர் மல்க தெரிவித்தது வேதனை அளிப்பதாக இருந்தது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.