யாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் 17-ந் தேதி முதல் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்குகிறது.

யாழ்ப்பாணத்தில் பலாலியில் உள்ள விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையமாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச நிலையம் என்ற பெயரில் இனி பலாலி விமான நிலையம் அழைகப்படும்.

டெல்லி, மும்பை, கொச்சியில் இருந்து மட்டுமே முதலில் யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு விமான நிலையங்களை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில் சென்னை, திருச்சி, மதுரைக்கும் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டன. இதனையடுத்து வரும் 17-ந் தேதி முதல் விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

அன்றைய தினம் சென்னையில் இருந்து அல்லையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் சோதனை ஓட்டத்துடன் சேவைகளைத் தொடங்க உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments