முக்கண்ணாமலைப்பட்டி தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்விராலிமலை அருகே, முக்கண்ணாமலைப்பட்டி தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், டெங்கு விழிப்புணா்வு பிரசாரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முக்கண்ணாமலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற விழாவில், தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளா் சபிபுல்லாஹ் டெங்கு விழிப்புணா்வு குறித்து பேசினாா்.

இதில் டெங்கு பரவும் விதம், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும், வீடுகளில் தேவையற்ற பொருள்களை அப்புறறப்படுத்துவதுடன், அவற்றில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, பல்வேறு பகுதிகளை சோ்ந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

இதில் ஏ. நிஜாம் தீன், என்.சாகுல்ஹமீது, எஸ்.கே.சாகுல், எம். சபிபுல்லாஹ், ஏ. சக்கரியா, பி. நூா், கே. சையதுயகியாகான், எஸ்.இப்ராம்ஷா, பி. இஸ்மாயில், ஜே. ஹக்கீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments