மாணவர்கள்தான் இலக்கு! - புதுக்கோட்டையை மிரட்டும் போதைஊசி கும்பல்புதுக்கோட்டையில், கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் போதைஊசிகள் பயன்படுத்தி, போதைக்கு அடிமையாகி வருவதாக மாணவர்களின் பெற்றோரிடமிருந்து புகார்கள் எழுந்தன.

குறிப்பாக, பள்ளி மாணவர்கள்தான் அதிக அளவில் போதைக்கு அடிமையாகிவருவதாக வந்த அதிர்ச்சித் தகவல்களை அடுத்து, போதைஊசி பயன்படுத்தும் மாணவர்களைக் கண்காணிக்கவும், விற்பவர்களைப் பிடிக்கவும் மாவட்ட எஸ்பி செல்வராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, புதுக்கோட்டை போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதுபற்றி வந்த புகார்களின் அடிப்படையில், இளைஞர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், போதைஊசி மருந்துகள் விற்றவர்களை மாணவர்கள் அடையாளம் காட்டினார். அதன் அடிப்படையில், போதைஊசிகள் விற்றதாக புதுக்கோட்டை அடைப்பன் வயலைச் சேர்ந்த சதீஸ்வரன் (25), மேல வீதியைச் சேர்ந்த தர்மா (25), திருக்கோகர்ணம் சுகுமார் (27), பிரபாகரன் (27) மற்றும் மச்சுவாடியைச் சேர்ந்த பாண்டியராஜ் (23), ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் (24) ஆகிய 6 பேர் சேர்ந்த கும்பலை திருக்கோகர்ணம் போலீஸார் கைதுசெய்தனர்.

அவர்களிடமிருந்த வலி நிவாரணி மருந்து மாத்திரைகள், ஊசி மருந்துகளைப் பறிமுதல்செய்தனர். கடந்த வாரம், அறந்தாங்கி பகுதியில் போதைஊசி மருந்துகள் விற்றதாக 6 பேர் கொண்ட கும்பல் கைதுசெய்யப்பட்ட நிலையில், மற்றொரு கும்பலைக் கைதுசெய்துள்ளனர்.
புதுக்கோட்டையில் அடுத்தடுத்து போதை ஊசி விற்கும் கும்பல் சிக்கிவருகிறது.

இதுபற்றி போலீஸார் கூறும்போது,``வலி நிவாரணி மாத்திரைகளை நீரில் கரைத்து, ஊசிகளாகப் போட்டுக்கொண்டு இளைஞர்கள் போதையில் மிதக்கின்றனர்.

தற்போது கைதுசெய்யப்பட்ட கும்பல், வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கிவந்து, மாணவர்களிடம் விற்பனை செய்கின்றனர். இன்னும் பலர், போதை மருந்துகள் விற்பனையில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்திவருகிறோம்.

மாணவர்கள் போதைக்கு அடிமையாவது தெரிந்தால், பெற்றோர்கள் தைரியமாக போலீஸாரிடம் புகார் அளிக்கலாம்" என்றனர்.

நன்றி :- விகடன் 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments