மீமிசலில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமுமுக, மமக சார்பாக 17.10.2019 மாபெரும் சாலை மறியல் போராட்டம்புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையகோவில் ஒன்றியம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  மீமிசல், நாட்டாணி புரசக்குடி, வெளிவயல், பொன்னமங்கலம் மற்றும் திருப்புனவாசல் ஊராட்சி பகுதிகளில்
2016 முதல் ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் நிதியில் இருந்து இதுவரை எந்த ஒரு திட்டமும் செய்யாத ஊரக வளர்ச்சி துறையை கண்டித்து வருகிற 17.10.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை மீமிசல் செக் போஸ்ட் அருகில் A.அப்துல் சுக்கூர், ஒன்றிய செயலாளர், தமுமுக அவர்கள் தலைமை மற்றும் தமுமுக & மமக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையிலும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி:

  • பொய்யாதநல்லூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ள காரணத்தால் புதிய தார்சாலை அமைக்க கோரியும். 
  • கோபாலப்பட்டிணத்தில் பல பகுதியில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதை நீக்கி புதிய சாலை அமைத்து தரக்கோரியும்.
  • சேமங்கோட்டை முதல் குளத்தூர் செல்லும் சாலையை சீரமைத்து தரக்கோரியும்.
  • ஆர்.புதுப்பட்டிணம் குடியிருப்பு பகுதியில் புதிய சாலை அமைத்து தரக்கோரியும்.
  • ஏம்பக்கோட்டை குடியிருப்பு பகுதியில் புதிய சாலை அமைத்து தரக்கோரியும்.

மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


உரிமைகளை வெல்ல போராட்டத்திற்கு அழைப்பது:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மற்றும்
மனிதநேய மக்கள் கட்சி
ஆவுடையார் கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

தொடர்புக்கு: 7395867990, 9790282250, 9488781277, 7402063328

தகவல்: A.அப்துல் சுக்கூர், ஒன்றிய செயலாளர், தமுமுக.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments