நடப்பு நிகழாண்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்துள்ளது பற்றி கேள்வி எழுப்பியது. இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், 2017-18-ஆம் நிதியாண்டில் சுமார் 11 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்களும், கடந்த நிதியாண்டில் 4 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள் மட்டுமே அச்சிட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு 2 ஆயிரம் ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. உயர்மதிப்பு ரூபாய் தாள்களை திடீரென செல்லாது என அறிவிக்காமல், படிப்படியாக புழக்கத்தை குறைப்பதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது எனவும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இந்த முறை கடைபிடிக்கப்படுவது வரவேற்புக்குரியதுதான் எனவும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, புதிய ரூ.2000 தாள்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.