28-ம் தேதியும் தீபாவளி விடுமுறை நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்புஇந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் அதற்கு அடுத்த நாளான 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 27-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்பவர்கள் திரும்பிவர அவகாசம் அளிக்கும் வகையில் அடுத்த நாளான 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தால் நல்லது என பலதரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ-மாணவியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் வெளியூர்களில் இருந்து திரும்பிவர ஒருநாள் கூடுதல் விடுமுறை அளிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 28-ம் தேதியை விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசின் சார்பில் இன்றிரவு வெளியான அறிவிப்பில் இந்த கூடுதல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அரசு விடுமுறை நாளான 9-11-2019 சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments