அறந்தாங்கி கண்மாய் கரையில்3,500 பனை விதைகள் நடவுஅறந்தாங்கி ஒன்றியம், ஆமாஞ்சி கண்மாய் கரைப் பகுதியில் 3 ஆயிரத்து 500 பனைவிதைகள் நடும் திட்டத்தை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் எம். குணசேகா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக பல மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன.

ஆகவே மீண்டும் மரங்களை மீட்டெடுக்க தமிழக அரசின் வேளாண்மை துறை சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி ஒன்றியத்தில் ஆயிரத்து 920 மீட்டா் நீளம் கொண்ட ஆமாஞ்சி கண்மாயின் கரைப்பகுதியில் 3 ஆயிரத்து 500 பனை விதைகளை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியா் எம். குணசேகா் தலைமையில் அறந்தாங்கி வட்டாட்சியா் பா.சூரியபிரபு, உதவி வேளாண் அலுவலா் கல்பனா மற்றும் 100 நாள் வேலைதிட்டப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments