அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான நிஸ்தா பயிற்சி: நான்கு கட்டமாக நடந்ததுஅறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நிஸ்தா பயிற்சி நான்கு கட்டங்களாக 5 நாள் பயிற்சி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இப்பயிற்சியானது தொடங்கியது.

இப்பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் அருள் தலைமையில் தொடங்கியது.

அறந்தாங்கி வட்டாரக் கல்வி அலுவலர் முத்துக்குமார் மற்றும் அறந்தாங்கி ஐடியல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஷேக் சுல்தான் இருவரும் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியினை அறந்தாங்கி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் வரவேற்றார்.

இப்பயிற்சியின் முதன்மைக் கருத்தாளராக புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஈஸ்வரன், சசிகுமார், பார்வதி, ஷியாமளா பன்னீர்செல்வம் மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் பயிற்சியின் கருத்தாளர்களாக செய்யப்பட்டனர்.

இப்பயிற்சியில் ஆவுடையார் கோவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனிதா கலந்து கொண்டார்.

இப்பயிற்சியில் புதிய பாட பொருளில் கற்றல் கற்பித்தலில் கற்றல் நோக்கங்கள், கற்றல் செயல்பாடுகள் மற்றும் கற்றல் விளைவுகள் குறித்து மாணவர்களின் கற்றல் அடைவுகள் மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இப்பயிற்சிக்காண அனைத்து ஏற்பாடுகளையும் ஆசிரியர் பயிற்றுனர் சசிகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments