இனிப்பு மிகுந்த பானங்களின் விளம்பரங்கள் ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை, ஆன்லைனில் இடம் பெற தடை விதிக்கப்படும் என்ற அறிவிப்பின் மூலம், விளம்பர தடையை அமல்படுத்தும் உலகின் முதல்நாடு என்ற பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது.
சர்வதேச சர்க்கரை நோயாளிகள் அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், இன்றைய உலகில் 42 கோடியாக இருக்கும் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை, வரும் 2045ல் 62.90 கோடியாக அதிகரிக்கும். மேலும் வளர்ந்த நாடுகளிடையே அதிகபட்சமாக, சிங்கப்பூரில் 13.7 சதவீதம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், இனிப்பு மிகுந்த பானங்களுக்கு ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை, ஆன்லைன் ஆகியவற்றில் விளம்பரம் வெளியிட சிங்கப்பூர் அரசு விரைவில் தடை விதிக்க உள்ளது.
இது தொடர்பாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சுகாதாரமற்ற பானங்களின் லேபிளில், அதில் உள்ள ஊட்டச்சத்து பொருட்கள், சர்க்கரையின் அளவு தெரியும்படி குறிப்பிடப்பட வேண்டும். மிகவும் சுகாதாரமற்றதாக அடையாளம் காணப்படும் பானங்களின் விளம்பரங்கள் ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை, ஆன்லைனில் இடம் பெற தடை விதிக்கப்படும். விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களை சென்றடைவதை தடுக்கும் வகையில் இந்த விளம்பர தடை அமல்படுத்தப்பட உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக சர்க்கரைக்கு வரி அல்லது தடை விதிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது.
எனவே இனிப்பு பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் சர்க்கரையின் அளவை குறைக்கவோ அல்லது பானத்தில் சேர்க்கும் மூலப்பொருட்களை சீர்படுத்தவோ கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விளம்பர தடை குறித்து தொழில் நிறுவனங்களின் கருத்துகள் கேட்டறியப்பட்ட பின்னர், அடுத்த சில மாதங்களில் இவை அமல்படுத்தப்படும். இதனை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து அடுத்தாண்டு அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.