கீரனூர் பகுதிகளில் தொடர் விபத்துகளை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து துறைகள் இணைந்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோடடை மாவட்டம் கீரனூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பல்வேறு இடங்களில் சாலைகளில் விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்டது.

குறிப்பாக கீரனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட திருச்சி- புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 7 கார்கள் மோதி விபத்தை ஏற்படுத்தி 5 பேர் சம்வ இடத்திலேயே இறந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் விபத்துள் நடைபெற்று வரகிறது. மேலும் சில இடங்களில் விபத்து ஏற்பட்டு இறந்து விடுகின்றனர். சில இடங்களில் நடக்கும் விபத்துகளில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு வருகின்றனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் வாகன ஓட்டிகளின் அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்துகள் என்று அந்ததெந்த விபத்துகள் நடந்த இடத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் தெரிவித்தனர்.

விபத்தில் இறந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தால் காயத்துடன் உயிரிழப்பு இல்லாமல் தப்பி இருக்கலாம். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கும்போது சீட் பெல்ட் அணிந்திருந்தால் கட்டாயம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது என்று போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் போலீசார் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் வாகன ஓட்டிகளை மிரட்டி அபராதம் விதிக்கின்றனர். அத்துடன் அவர்களுக்கு ஹெல்மெட்டின் முக்கியத்துவம், சீட் பெல்டின் முக்கிய துவத்தையும் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  இதபோல் போலீசார் வழக்கு பதிவு செய்து வாகன ஓட்டிகளின் லைசென்சை பெற்று அந்தெந்த போட்டார் வாகன போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கின்றனர். அங்கு வாகன ஓட்டிகள் சென்று சில நடமுறைகளை செய்துவிட்டு லைசென்சை பெற்று செல்கின்றனர். அங்கேயும் அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் நடைமுறைகைளை முடித்து கொண்டு எந்தவித விழிப்புணர்வும் செய்யாமல் அப்படியே அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட், சீட்பெல்ட் முக்கியத்துவம் மற்றும் மோட்டார் வாகன சட்ட விதிகள் உள்ளிட்டவைகள் தெரியவில்லை. இதனால் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க போலீசார் மற்றும் மோட்டார் வாகன துறை இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி விபத்துகளை குறைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கீரனூர் பொதுமக்கள் கூறியதாவது:

விபத்துகளினால் ஒரு உயிர் இறக்கும்போது அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சியும் அழிந்து விடுகிறது. இதனால் விபத்துகளை குறைக்க இனியாவது போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மோட்டார் வாகன சட்டதிட்டங்களை எளிதில் மக்கள் புரிந்துகொள்ளும்படி கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறிந்து அந்தந்த பகுதியில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும். அந்த பகுதிகளில் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் பணியில் அமர்த்த வேண்டும் என்றனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments