இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்இளையான்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இளையான்குடி பேரூராட்சியில் பலமாதங்களாக காலியாக உள்ள செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நகருக்கு அருகிலேயே புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்.

காவிரி கூட்டுக்குடிநீரை 3 நாட்களுக்கு ஒருமுறை சீராக வினியோகிக்க வேண்டும். காவிரி குடிநீர் திட்ட குழாய்களை புறவழிச்சாலை வழியாக கொண்டு வந்து பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொட்டியில் இணைக்க வேண்டும்.

மின் அலுவலகம் அருகில் உள்ள கழிவு நீர் குளத்தை அகற்றி, அங்கு சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி நகர் செயலாளர் உமர்கத்தாப் தலைமை தாங்கினார்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் மவுலாநாசர், இணை பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில துணை செயலாளர் முகம்மது சைபுல்லாஹ், பஷீர் அகம்மது, காஜா மைதீன், சாகுல் ஹமிது சேட், முபாரக், செய்யது மகபூப், ஜமால் மைதீன், சதாம், உஸ்மான் அலி, பிர்தவ்ஸ், அஜ்மல்கான், முத்து ஹவுத், முஸ்தபா, காசிம், சாகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments