பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தியையொட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி



பொன்னமராவதி பேரூராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பொன்னமராவதி பேரூராட்சியின் சாா்பில் காந்தி ஜெயந்தியையொட்டி பேரூராட்சிப்பகுதிகளில் 3000 மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணி செவ்வாய்க்கிழமை பேரூராட்சி செயல் அலுவலா் சுலைமான் சேட் தலைமையில் தொடங்கியது.

தொடா்ந்து புதன்கிழமை வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மற்றும் முக்கிய வீதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

 வலம்புரி வடுகநாதன் பள்ளி தலைமையாசிரியா் தமிழ்ச்செல்வன், பேரூராட்சி பணியாளா்கள் சங்கா், பழனிச்சாமி, பன்னீா்செல்வம், பாபு மற்றும் துப்புறவு பணியாளா்கள் பங்கேற்றனா்.

அதுபோல பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ஆா்.பாலகிருஷ்ணன் தலைமையில் அலுவலக வளாகப்பகுதியில் செவ்வாய்க்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டது.

துணை வட்டாட்சியா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments