பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க வாழ் இந்தியர் உட்பட மூன்று பேருக்கு அறிவிப்பு: தலைவர்கள் வாழ்த்துபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க வாழ் இந்தியர் உட்பட மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த 10ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இதில், இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சர்வதேச அளவில் வறுமையை ஒழிக்க மேற்கொண்ட ஆய்விற்காக இந்த பரிசு அபிஜித் பானர்ஜிக்கு கூட்டாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். அதேபோல், இவரது மனைவியான எஸ்தர் டஃப்ளோவுக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டடுள்ளது. மைக்கேல் கிரீமர் என்ற அமெரிக்க பொருளாதார ஆய்வாளருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அறிவித்த குறைந்தபட்ச ஊதிய உத்தரவாத திட்டத்துக்கு யோசனையை கூறியவர் அபிஜித். நாட்டின் வறுமை ஒழிப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் அபிஜித் பானர்ஜி திறன்மிக்கவராக திகழ்வது பாராட்டத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

ராம்நாத் கோவிந்த்: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அபிஜித்தின் ஆராய்ச்சி இந்திய அளவிலும், உலக அளவிலும் வறுமையை எதிர்கொள்ள பொருளாதார வல்லுநர்களின் ஆய்வு உதவும் என கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க உங்களது கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் எனவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறவுள்ள அபிஜித் பானர்ஜி, அவரது மனைவிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments