R.புதுப்பட்டிணத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டம்..!



புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி R.புதுப்பட்டிணம் பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று 02.10.2019 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் மதியழகன் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோபாலப்பட்டினம் அவுலியாநகர் முதல் பெரியபள்ளிவாசல், ஆலமரம் பள்ளிவாசல் வழியாக அரண்மனை தோப்புக்கு செல்லக்கூடிய சாலையை புதிய தார்சாலையாக அமைத்து தர வேண்டியும், R.புதுப்பட்டிணம் முஸ்லீம் கிராமத்தில் பெண்கள் மதரஸா தெருவில் உள்ள சிமெண்ட் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் அதை உடனடியாக சரிசெய்து தரவேண்டியும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் கூட்டத்தில் கோபாலப்பட்டினத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டி குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் ஊராட்சி செயலர் மதியழகன், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த உமர்கத்தா, பசீர் அலி, சாகுல் ஹமீது, சித்திக் அலி, சல்மான் கான்,தாவூத் மற்றும் சுய உதவிக் குழுக்கள், R.புதுப்பட்டிணம் இளைஞர்கள் மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கோபலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு GPM மீடியா-வின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 








புகைப்பட உதவி: சித்திக் அலி, சல்மான் கான்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments