புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் வேலை!



புதுக்கோட்டை ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant) பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

தமிழக அரசின் பால்வளத்துறை, ஆவின் பால் நிறுவனத்தின் ஒரு அங்கம் புதுக்கோட்டை மாவட்டம் திருகோகர்ணத்தில் இயங்கி வருகிறது. இங்கு கால்நடை ஆலோசகர் தற்காலிக பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, கால்நடை ஆலோசகர் பணிக்கு மொத்தம் இரண்டு காலியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் கால்நடை அறிவியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1.7.2019 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் கார் அல்லது ஏதேனும் ஒரு இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் N.A.D.P இந்த திட்டத்தின் கீழ் கால்நடை ஆலேசாகர் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். மாதம் ரூ.23,500 முதல் ரூ.34,500 வரையில் சம்பளம் வழங்கப்படும். N.A.D.P திட்டத்தின் ஒப்பந்த காலம் உள்ள வரையில் பணியில் இருப்பர்.

 இந்த கால்நடை ஆலோசகர் பணியில் சேருவதற்கு மேற்கண்ட தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள், வரும் நவம்பர் 12 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கவும். நேர்முகத் தேர்வின் போது, விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அசல், ஜெராக்ஸ் கல்விச்சான்றிதழ்கள், அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பம் கிடைக்கும் இடம்:

General Manager, Pudukkottai D.C.M.P..U Ltd., Pudukkottai-2.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

THE PUDUKKOTTAI DISTRICT CO-OPERATIVE MILK PRODUCERS UNION LTD.,
Kalyanaramapuram 1St street, Thirukokarnam, Pudukkottai-2

இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ஆவின் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:

https://aavinmilk.com/web/guest/employee-notification

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments