சென்னையில் 2வது விமான நிலையம் ஆய்வு பணிகள் அடுத்த வாரம் தொடக்கம்: 2 இடங்கள் தேர்வு



சென்னை விமான நிலையத்தின் விமான போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளும் திறன் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் 2வது விமான நிலையத்தை அமைக்க விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் சென்னைக்கு அருகே புதிய விமான நிலையத்தை  அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. விமான நிலையம் அமைக்க வாய்ப்புள்ள இடங்களை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதற்காக சென்னையில்  இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள இடங்களை தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதில், மாமண்டூருக்கும் செய்யூருக்கும் இடையில் உள்ள இடம், காஞ்சிபுரத்திற்கும் அரக்கோணத்துக்கும் இடையில் உள்ள பரந்தூர் ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்படலாம் என்று விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிலையம் அமைக்க குறைந்தபட்சம் 1500 ஏக்கரில் இருந்து 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை. புதிய விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யுமாறு ஏற்கனவே தமிழக அரசுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது கண்டறியப்பட்டுள்ள 2 இடங்களும் தமிழக அரசு சுட்டிக்காட்டிய இடமாகும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments