அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு மர்ம காய்ச்சலால் படையெடுக்கும் மக்கள்



மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குவிந்து வருகிறார்கள்.அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய லேப்டெக்னீசியன் பற்றாக்குறையால், நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை விளங்கி வருகிறது.

சுமார் 6 தாலுகாகளை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வரும் மருத்துவமனையாக இந்த மருத்துவமனை உள்ளது. புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கிய பின், மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

இதை தொடர்ந்து தலைமை மருத்துவமனையாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடவசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருந்த போதிலும், சுகாதாரத்துறை அறந்தாங்கி அரசு மருத்துமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. அறந்தாங்கி மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் டெங்கு, வைரஸ் உள்ளிட்ட காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு தினசரி 600 முதல் 700 வரையிலான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

இவர்களில் காய்ச்சல் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதயக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். அவ்வாறு ரத்த பரிசோதனை செய்து ரிப்போர்ட்டுடன் வரும் நோயாளிக்கு அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு தக்கவாறு மருத்துவர்கள், ஊசி, மருந்து, மாத்திரைகள் எழுதுகின்றனர். சிலர் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்நோயாளிகளுக்கு நாளைக்கு 2 முறைக்கு மேல் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். தினசரி 400க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை மையத்தில் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தினசரி 400க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய வேண்டிய நிலையில், தற்போது 2 பேர் மட்டுமே லேப் டெக்னீசியன்களாக உள்ளனர். இவர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சாப்பிடக்கூட செல்லமுடியாத அளவிற்கு நோயாளிகள் ரத்த பரிசோதனை செய்ய செல்கின்றனர். இதற்கிடையில் அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு உடனுக்குடன் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.

மற்றவர்கள் ரத்த பரிசோதனை செய்வதற்காக சென்றால் பல மணி நேரம் வாசலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலர் காலையில் எதுவும் சாப்பிடாமல், வெறும் வயிற்றுடன் ரத்த பரிசோதனை செய்ய வருகின்றனர். ரத்த பரிசோதனை மையத்தில், கூட்டம் அதிகமாக இருக்கும்போது, வெயிலில் காத்திருப்பதால், சில சமயம் அவர்கள் மயங்கி கீழே விழும் நிலை உள்ளது.

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ரத்த பரிசோதனை செய்ய கூடுதலாக லேப் டெக்னீசியன்களை நியமிக்க வேண்டும், ரத்த பரிசோதனை மையத்திற்கு செல்ல முறையாக சாலை அமைக்க வேண்டும். சுகாதாரத்துறை அலட்சியத்தால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

என பொதுமக்களும், நோயாளிகளும் பாதிக்காதவகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments