புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகார்களை பொது மக்கள் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்புவடகிழக்கு பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான புகார்களை பொது மக்கள் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இருப்பினும் அனைத்து பொதுமக்களும் அவரவர் பகுதிகளில் குடிநீர் விநியோகம், தெருவிளக்கு சம்மந்தமான புகார்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தேங்கிக்கிடக்கும் குப்பைகள், மழையினால் சாலைகள் சேதம், வீடுகள் சேதம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருத்தல், வாய்க்கால்கள் அடைப்பு, குளங்கள், ஏரிகள் உடைப்புகள், கால்நடைகள் இறப்பு போன்றவை தொடர்பான விவரங்களையும் கீழ்கண்ட தொடர்புடைய தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகாரை தெரிவிக்கலாம்.

நகராட்சி பகுதிகள் தொடர்பாக புகார் தெரிவிக்க புதுக்கோட்டை நகராட்சி 04322-222252 மற்றும் 04322-222253, அறந்தாங்கி 04371-220556,

பேரூராட்சி பகுதிகள் தொடர்பாக புகார் தெரிவிக்க ஆலங்குடி பேரூராட்சி 18004257212, அன்னவாசல் 18004257213, அரிமளம் 18004257214, இலுப்பூர் 18004257215, கறம்பக்குடி 18004257216, கீரமங்கலம் 18004257217, கீரனூர் 18004257218, பொன்னமராவதி 18004257219. கிராம ஊராட்சி பகுதிகள்: அன்னவாசல் 18004259014, அறந்தாங்கி 18004259015, அரிமளம் 18004259016, ஆவுடையார்கோவில் 18004259017, கந்தர்வக்கோட்டை 18004259018, கறம்பக்குடி 18004259019, குன்றாண்டார்கோவில் 18004259020, மணமேல்குடி 18004259021, பொன்னமராவதி 18004259022, புதுக்கோட்டை 18004259023, திருமயம் 18004259024, திருவரங்குளம் 18004259025, விராலிமலை 18004259026 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

குடிநீர் விநியோகம், தெருவிளக்கு சம்மந்தமான புகார்கள், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, தேங்கிக்கிடக்கும் குப்பைகள், மழையினால் சாலைகள் சேதம், வீடுகள் சேதம், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியிருத்தல், வாய்க்கால்கள் அடைப்பு, குளங்கள், ஏரிகள் உடைப்புகள், கால்நடைகள் இறப்பு தொடர்பாக, தொடர்புடைய நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கண்ட தொலைபேசி எண்ணில் அல்லது கட்டணமில்லா தொலைபேசியில் புகார்கள் தெரிவிக்கலாம். மேற்கண்ட தொலைபேசி எண்களில் குடிநீர், தெருவிளக்கு, டெங்கு காய்ச்சல், தேங்கிக்கிடக்கும் குப்பைகள் மற்றும் மழையினால் ஏற்படும் சேதங்கள் தவிர இதர பிரச்சினைகள் தொடர்பாக புகார் ஏதும் தெரிவிக்கப்பட கூடாது. மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் புகார் தெரிவித்து 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அதன் விவரத்தினை மாவட்ட அளவில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-9013-ல் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments