சவுதி அரேபியா ரியாத்தில் நடைபெற்ற தமிழ் தாஃவா & தமுமுக சார்பாக மாதாந்திர விளக்க கூட்டம் சவுதி அரேபியா ரியாத் மண்டலம் தமிழ் தாஃவா - தமுமுக நியூ செனையா கிளை நடத்திய மாதாந்திர மார்க்க விளக்க கூட்டம் 10-10-2019, வியாழன்கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நாஃப்கோ கம்பெனி பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்த கூட்டத்திற்கு கிளை தலைவர் அபுஹுரைரா அவர்கள் தலைமை தாங்க , மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டம் சகோ.அபுதாஹிர் அவர்கள் கிராத் ஓத, மண்டல தமுமுக துணைச் செயலாளர் அஹமது கபீர் அவர்கள் வரவேற்புரையாற்ற, இனிதே துவங்கியது.

அதனைத் தொடர்ந்து  கிளை தலைவர் மெளலவி அபுஹுரைரா அவர்கள் நன்மையை நோக்கி விரைவோம் என்ற தலைப்பிலும், மண்டல துணைத் தலைவர் மெளலவி இப்ராஹிம் அன்வாரி அவர்கள் சஹாபாக்களின் தியாகங்கள் என்ற தலைப்பிலும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் உரையாற்றினார்கள்.


மேலும் மண்டல தமுமுக - மமக தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்கள் இன்றைய சூழ்நிலையில் இந்திய முஸ்லீம் மக்களின் நிலை எவ்வாறு உள்ளது என்று அனைத்து சகோதரர்களுக்கும் தெளிவாக எடுத்துரைத்தார்.

இறுதியாக மண்டல தமுமுக துணைச் செயலாளர் அஹமது கபீர் அவர்கள் நன்றியுரையாற்ற, துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

இக்கூட்டத்திற்கு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். வருகை புரிந்த அனைத்து சகோதரர்களுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

தகவல் :-
தமிழ் தஃவா தமுமுக - மமக
ரியாத் - சவூதி அரேபியா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments