மீமிசல் பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் உடனே அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த  கிழக்கு கடற்கரை சாலையில் சிறு நகராக உள்ளது மீமிசல்.

திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, மதுரை, தேவகோட்டை, காரைக்குடி, சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்புகின்றன. இதுதவிர ராமேஸ்வரம், சாயல்குடி, திருப்புனவாசல், வேதாரண்யம், வேளாங்கன்னி, ஏர்வாடி, சிதம்பரம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளும் மீமிசல் வழியாகவே சென்று வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் மீமிசலை கடந்து செல்கின்றன. இதுதவிர இப்பகுதியில் மீன்பிடித் தொழில் சிறந்து விளங்குவதால், மீன்தொழில் சார்ந்த நூற்றுக்கணக்கான வாகனங்களும் சென்று வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பலில் வரும் பொருள்களை ஏற்றிக் கொண்டும், கப்பலில் பொருள்களை ஏற்றி அனுப்ப பொருள்களை ஏற்றிக் கொண்டும், தினசரி நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் மீமிசலை கடந்து செல்கின்றன.

மீமிசலை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மீனவர்கள், விவசாயிகள் அதிக அளவில் குடியிருந்து வருகின்றனர். இவர் தங்கள் குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக மீமிசலுக்கு வந்து செல்கின்றனர். மேலும் புதன்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தைக்கு ஆயிரக்கணக்கான கிராமமக்கள் வந்து, பொருள்களை வாங்கி செல்கின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள், வாகன ஓட்டுனர்கள் கூடும் இடமாக பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் அருகே ஓடும் ஆற்றில் பேருந்து நிலையத்தை ஒட்டினாற்போல பல டன்கள் எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, எளிதில் மக்காத பிளாஸ்டிக் கேரி பைகள், கப்புகள் என கிடக்கின்றன. மேலும் பல்வேறு கழிவுகளும் பேருந்து நிலையத்தை ஒட்டினாற்போல கிடக்கின்றன.

இந்த கழிவுகளில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் கொசுக்கள், அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், பேருந்துகளின் டிரைவர், நடத்துனர்கள், வியாபாரிகள், சந்தைக்கு பொருள்கiளை வாங்க வரும் பொதுமக்கள் என பலரையும் கடிக்கின்றன. டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசு பேருந்து நிலையம் அருகே கிடக்கும் கழிவுகளில் உருவாக வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் ஏற்படும் டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்டவரை கடிக்கும் கொசு மற்றவர்களையும் கடிப்பதால், டெங்கு காய்ச்சல் மீமிசல் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. எனவே குப்பைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments