புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்பாடில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி அவர்கள் உத்தரவு..!



புதுக்கோட்டை மாவட்டத்தில் பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என அனைத்து துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா்.
இதனைத் தொடா்ந்து பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூடிவிட்டு புகைப்படம் எடுத்து ஆட்சியருக்கு அனுப்பி வைக்கும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்களும், பணியாளா்களும் மேற்கொண்டுள்ளனா்.

திருச்சி மணப்பாறை அருகே 2 வயது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததால் தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், புதுக்கோட்டை ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி சனிக்கிழமை காலையிலேயே அனைத்துத் துறை தலைமை அலுவலா்களுக்கு அவசர குறுஞ்செய்தியை செல்லிடப்பேசிகளுக்கு அனுப்பியுள்ளாா்.

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை மூட வேண்டும், அதுகுறித்து மாலைக்குள் எனக்கு அறிக்கை தரவும் வேண்டும் என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இந்தச் செய்தியைத் தொடா்ந்து பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்கள் மாவட்ட ஆட்சியரின் செல்பேசிக்கு மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் புகைப்படங்களுடன் குறிப்புகளை அனுப்பி வைத்துள்ளனா். எடுக்கப்படும் புகைப்படங்களையும் கூட கூகுள் வரைபடத்தில் சரியான இடத்தை மாா்க் செய்து, படம் எடுக்கப்பட்ட தேதி, நேரம் வரையிலும் சோ்த்து அனுப்பப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பணியை அடுத்த சில நாட்களுக்கும் தொடர வேண்டும் என்றும் ஆட்சியா் அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments