கோபாலப்பட்டிணம் VIP நகர் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்.. நடவடிக்கை எடுக்குமா ஊராட்சி நிர்வாகம்..?புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் VIP நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி மாவட்டம் தோறும் பரவலாக பெய்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் பல பகுதிகளில் தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் காணாமல் போனது.

இதனால் தண்ணீர் வடிய வழியில்லாமல் வீடுகளையும், முக்கிய வீதிகளையும் சூழ்ந்துள்ளது. இதனால் பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயமும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்து வருகிறது.

மழைஅறிவிப்பு வந்தவுடன் அதிகாரிகள் வடிகால் வாரிகளை கண்டரிந்து தூர் வாரியிருந்தால் தண்ணீர் தேங்காமல் இருந்திருக்கும் என்றும் பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.

மீமிசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து பகல் இரவு எனக் கடும் மழைபெய்து வருகிறது. கடந்த 10 வருடங்களாக மழைக்காக ஏங்கிய மக்களுக்கு மழை போதும் போதும் என்கிற அளவுக்கு பெய்து வருகிறது.

இந்நிலையில் பெய்யும் மழை முறையாக அந்தந்த பகுதியில் உள்ள குளங்களுக்கு செல்ல முடியாமல் குடியிருப்புகள், தெருக்களில் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக கோபாலப்பட்டிணம் VIP நகர் ஒரு காலத்தில் பொட்டல் காடாக  இருந்தது.

தற்போது மனைக்கட்டுகளாக மாறி 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

தற்போது இந்த நகர் தண்ணீரின் நடுவே உள்ளது. தண்ணீர் வெளியேற்ற வழியில்லாமல் கடந்த 7 நாட்களாக தேங்கியே நிற்கிறது.

தண்ணீரில் விஷ புச்சிகள் மிதந்து வருவதால் மக்கள் பயத்துடன் உள்ளனர். மேலும் பல்வேறு தொற்று நோய்கள் காய்ச்சல் பயத்தில் உள்ளனர்.

மேலும், கோபாலப்பட்டிணத்தில் உள்ள சில தெருக்களிலும் தண்ணீர் இன்று வரை வடியாமல் குளம்போல் தேங்கி கிடக்கின்றன.

அப்பகுதி மக்கள் கூறுகையில் பல முறை இது சம்மந்தமாக ஊராட்சி தனி அலுவலரிடம் புகாரளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் VIP நகர் பகுதியில் குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தவும், வடிநீர் கால்வாய் உடனடியாக அமைத்து மழைநீர் செல்ல வழிவகை செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments