அறந்தாங்கியில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி..அறந்தாங்கியில் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.6 கோடியே 37 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகளை அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினா் இ.ஏ. இரத்தினசபாபதி வழங்கினாா்.

புதுக்கோட்டை மாவட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ், திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சிக்கு, அறந்தாங்கி வட்டார வளா்ச்சி அலுவலா் பி.பிரேமாவதி தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், மணமேல்குடி ஒன்றியங்களைச் சோ்ந்த 897 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக 3 கோடியே 51 லட்சத்தி 75 ஆயிரம் காசோலையாகவும், ரூ. 2 கோடியே 85 லட்சத்தி 67 ஆயிரம் மதிப்பில் 7,176 கிராம் தங்கமும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

விழாவில், அறந்தாங்கி வடக்கு ஒன்றியச் செயலாளா் சி.வேலாயுதம், மாவட்ட சமூகநலத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் பயனாளிகள் திரளாக கலந்து கொண்டனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments