நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் விடுவிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர். கிலானி அவர்கள் மரணம்...2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டவரும், அரசியல் கைதிகளுக்கான விடுதலைக் குழுவின் முக்கிய பொறுப்பாளருமான மனித உரிமைப் போராளி முன்னாள் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி அவர்கள் நேற்று 24.10.2019 வியாழக்கிழமை மாலை மாரடைப்பால் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

குறிப்பு: கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் காரில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானிக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுவித்தது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments