கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ​கழிவறை இல்லாததால் பள்ளி மாணவர்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் அவலம்..! பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?



மீமிசல் அருகே அரசு பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா, நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 346 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 198 மாணவிகளும், 148 மாணவர்களும் அடங்குவர். இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை பராமரிப்பின்றி சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதனால் பள்ளியில் பயிலும் மாணவர்கள் திறந்த வெளிப் பகுதியில் சிறுநீர் மற்றும் கழிப்பிட உபாதைகளுக்காக பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

அரசு மேல்நிலைபள்ளியில் பயிலும் மாணவிகள் கழிவறை இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றார்கள் என்ற தகவல் GPM மக்கள் மேடையின் கவனத்திற்கு சென்றதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிதியின் மூலம் ரூ.96,400 செலவில் மாணவிகளுக்கு 7 புதிய கழிவறைகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளிக் கல்வித் துறையும் மாணவர்களுக்கு தேவையான கழிவறை வசதி தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments