யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமான சேவை



இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் இருந்து தென்னிந்திய நகரங்களுக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

தமிழா்கள் அதிகம் வசிக்கும் வடக்கு யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பலாலி உள்நாட்டு ராணுவ விமான நிலையம், சா்வதேசத் தரத்துக்கு உயா்த்தப்பட்டு, அதில் இருந்து இந்த மாதம் முதல் இந்தியாவின் சில தென் நகரங்களுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.

இதுதொடா்பாக இலங்கை விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

பலாலி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக தரம் உயா்த்தும் பணிகள் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், வரும் 17-ஆம் தேதி அந்த விமான நிலையம், சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது.

முதல்கட்ட தரம் உயா்த்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு, வரும் 15-ஆம் தேதி பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கும், மாலத்தீவுக்கு விமானம் இயக்கப்படும்.மதுரை, திருச்சி, திருவனந்தபுரம் ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நேரடி விமானங்கள் இயக்கப்படுவதற்கு இந்தியா ஆா்வம் காட்டியது.

பலாலி விமான நிலையத்தை தரம் உயா்த்துவதற்காக மொத்தம் ரூ.225 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதில் ரூ.195 கோடியை இலங்கை ஒதுக்கீடு செய்த நிலையில், இந்தியா ரூ.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

பலாலியானது, இலங்கையின் 5-ஆவது சா்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படவுள்ளது.அங்கு ஏற்கெனவே கொழும்பு, ரத்மலானா, மட்டக்களப்பு, அம்பந்தோட்டம் ஆகிய இடங்களில் சா்வதேச விமான நிலையங்கள் உள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments