அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் 52 கிராம ஊராட்சிகளை கொண்டது. இதில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களுள் அறந்தாங்கியும் ஒன்று.
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய பகுதிகள், கடந்த ஆண்டு தாக்கிய கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் இந்த ஒன்றியத்தின் பல பகுதிகளில் மின்சார வினியோகம் இல்லை.
இதனால் கிராமப்பகுதிகளில் குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராம ஊராட்சிகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளில் இருந்து தனியார் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கஜா புயலின் தாக்கம் குறைந்த பிறகு அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பல லட்ச ரூபாய் செலவில், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு 2 ஜெனரேட்டர்களை வாங்கியது.
அப்போது வாங்கப்பட்ட ஜெனரேட்டர்கள் கிராமப்பகுதிகளுக்கு கொண்டு செல்லாமல் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டது.
எவ்வித பயன்பாடு இல்லாமல் ஊராட்சி ஒன்றி அலுவலக வளாகத்தில் மழை, வெயிலில் கேட்பாரற்று கிடக்கிறது.. பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 2 ஜெனரேட்டர்களை பயன்பாடின்றி போட்டு வைத்துள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது
அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு தேவைப்படாத ஒரு பொருளை பல லட்ச ரூபாய் செலவழித்து வாங்கிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், அதை பயன்படுத்தவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேவையில்லாமல் வாங்கப்பட்டுள்ள ஜெனரேட்டர்களை உடனடியாக விற்பனை செய்து அந்த நிதியை ஒன்றிய பொதுநிதியில் சேர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால், ஜெனரேட்டர் வைக்கப்பட்டுள்ள பகுதியில் மழைநீர் விழாத வகையில் கொட்டகை போட்டு, பல லட்ச ரூபாய் செலவு செய்து ஜெனரேட்டரை மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.