ஜித்தா வாழ் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு - வரும் 15,16 தேதிகளில் சிவில் சர்வீஸ் கல்வி பயிலரங்கம்!ஜித்தாவில் மாணவர்களுக்கான சிவில் சர்வீஸ் கல்வி பயிலரங்கம் வரும் நவம்பர் 15 மற்றும் 16 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

MICS (MONUMENTAL INSPIRATION IN TO CIVIL SERVICES) சார்பில் நடத்தப்படும் இந்த பயிலரங்கம் ஜித்தா இந்திய பன்னாட்டுப் பள்ளி ஆண்கள் பிரிவு ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது.

அது சமயம் Mr.K.P Ashif, (The Academic Head and Faculty of a reputed Civil Services Examination Training Institute in South India) அவர்கள் தலைமையில் இந்த பயிலரங்கத்தை நடத்தவுள்ளார்.

9,10,11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு என MICS நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

 வெள்ளிக்கிழமை காலை 08 மணி முதல் நடைபெறும் இந்த பயிலரங்கம் இரவு 8 மணி வரையிலும், சனிக்கிழமை அதேபோல காலை 08 மணி முதல் தொடங்கி இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். இடையில் தொழுகைக்கு மற்றும் உணவுக்கான இடைவேளைகள் உண்டு.  என்றும் MICS நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மிகக் குறைந்த இடங்களே இருப்பதால் மாணவர்கள் தாமதிக்காமல் www.mics-academy.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்னஞ்சல் முகவரி: info@mics-academy.org

மேலதிக தொடபுக்கு தொடர்பு எண்: 0507322337, 0503001840, 0506355182

இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் MICS தலைவர் அப்துல் கனி, செயலாளர் பொறியியலாளர் அல் அமான் அஹமது, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இஎம் அப்துல்லாஹ், முதன்மை உறுப்பினர் அலி கோயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments