வெளிநாட்டு நன்கொடை பெற தடை விதித்து 1,807 தொண்டு நிறுவனங்களின் பதிவினை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்தியில் மோடி அரசு வந்த பிறகு, வெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன. வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டப்படி விதிமுறை உருவாக்கப்பட்டது. இதன்படி, வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாத 14 ஆயிரத்து 800 தொண்டு நிறுவனங்களின் பதிவு இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு மேலும் 1,807 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிர்வாகங்களின் பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இந்த நிறுவனங்கள், கடந்த 6 ஆண்டுகளுக்கான வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை பலதடவை நினைவூட்டிய பிறகும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. பதிவு ரத்து செய்யப்பட்டதுடன், இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், கர்நாடகாவில் உள்ள சுவாமி விவேகானந்தா கல்வி சொசைட்டி, மராட்டிய மாநிலத்தில் உள்ள பாப்டிஸ்ட் கிறிஸ்டியன் அசோசியேசன் ஆகியவையும் அடங்கும்.
பெங்களூருவை சேர்ந்த இன்போசிஸ் பவுண்டேசன், தானே கேட்டுக்கொண்டதால், அதன் பதிவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.