புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு படுக்கை வசதியுடன் அரசுப் பேருந்து சேவை தொடக்கம்




புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து புதுக்கோட்டைக்கும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் நவீன குளிா்சாதன படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து சேவையை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.


தினமும் இப்பேருந்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கும், மற்றொரு பேருந்து சென்னையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கும் வந்தடையும்.

இப்பேருந்தில் திங்கள் முதல் வியாழன் வரை விழாக்காலம் நீங்கலாக படுக்கை வசதிக்கு ஒரு நபருக்கு ரூ.735, இருக்கை வசதிக்கு ரூ.450 பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் படுக்கை வசதிக்கு ஒரு நபருக்கு ரூ.815, இருக்கை வசதிக்கு ரூ.530 பயணக் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக திருச்சி கோட்ட மேலாளா் ராதிகா, திருச்சி கிளை மேலாளா் நேரு, நகராட்சி ஆணையா் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments