கோபாலப்பட்டிணத்தில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்..!புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கறிக்கடை அருகே அமைந்திருக்கும் மின்கம்பம் சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த மின்கம்பம் மிகவும் முக்கிய சாலையான பெண்கள் மதரசா மற்றும் கறிக்கடை அருகாமையில் அமைந்துள்ளது. அந்த சாலையானது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், மதரசா செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் பலத்த காற்று வீசினால் மின்கம்பங்கள் எந்த நேரத்தில் முறிந்து விழும் நிலையில் காட்சி அளிக்கிறது. மின்கம்பமானது பழுதடைந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டி தெரு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் கோபாலப்பட்டிணத்தில் பல இடங்களில் மின் கம்பமானது பழுதடைந்த நிலையில் உள்ளது. அதனை மின்சார வாரியம் பார்வையிட்டு கவனத்தில் கொண்டு மாற்று கம்பம் அமைக்கவேண்டும் என்றும், பல இடங்களில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரிசெய்து தரவேண்டும் என்று கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

குறிப்பு: கடந்த 08.11.2019 வெள்ளிக்கிழமை அதிகாலை பலத்த காற்று வீசியதில் VIP நகர், புயல் மாடி கட்டிடம் அருகில் இரண்டு மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments